அண்மைய செய்திகள்

recent
-

திருமலை கிறிஸ்தவ பாதிரியாருக்கு துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தல்

திருகோணமலை நகர பிரதேசத்திலுள்ள குவாட் லூபே தேவாலய பங்குத் தந்தைக்கு புலனாய்வுத் துறையினர் என தம்மை அடையாளப்படுத்திய நபர்களினால் துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருகோணமலை ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்திற்கு முதல் நாள், செவ்வாய்கிழமை இரவு இலக்கமற்ற மோட்டார் சைக்கிளில் தேவாயத்திற்கு வந்த இருவர், துப்பாக்கிமுனையில் பங்குத் தந்தையான அருட்திரு ஜோன்பிள்ளைக்கு இந்த அச்சுறுத்தலை விடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

தேவாலயத்தின் வழமையான பூசை வழிபாட்டை விடுதலைப் புலிகளின் மாவீரர் தின கொண்டாட்டம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததினம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறி, இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக திருகோணமலை ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த நபர்கள் தங்களை புலனாய்வுத் துறை எனக் கூறிய போது அதிகாரபூர்வ அடையாள அட்டையை காட்டுமாறு அருட் தந்தை அந்நபர்களை கேட்ட போது அந்நபர்கள் அவரது பாதிரியாருக்கான உடையைப் பிடித்து உலுக்கி, கீழே தள்ளிவிட்டு வெளியேறும் போது இந்த அச்சுறுத்தலை விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பாக ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு, இது தொடர்பாக பக்க சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுள்ளார். 

திருமலை கிறிஸ்தவ பாதிரியாருக்கு துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தல் Reviewed by Author on November 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.