சனல்-4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
தேசிய ஒன்றுமைக்கான இயக்கமே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்கள், சனல்-4 ஊடகவியலாளர்களின் வருகையை எதிர்க்கும் சுலோகம் தாங்கிய அட்டைகளை தாங்கியிருந்ததுடன் சனல்-4 புலிகளின் அட்டூழியங்களை வெளிப்படுத்த தவறியுள்ளதாகவும் இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
சுனல்-4 ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்கிய அரசாங்கத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தங்களுடைய கோஷங்களை எழுப்பினர்.
சனல்-4 ஊடகவியலாளரும் 'யுத்த சூன்ய வலயம்' படத்தின் இயக்குநருமான கலம் மக்றே விமான நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களால் சுற்றிவளைகப்பட்டாரென சனல்-4 ஊடகவியலாளரான ஜொனாதன் சமூக வலைத்தளங்களுக்கு செய்திகளை உடனடியாக அனுப்பினார்.
சனல்-4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
Reviewed by Author
on
November 11, 2013
Rating:

No comments:
Post a Comment