சிறுவர்தின அமைதிப்பேரணி மன்னாரில் -படங்கள்
குறித்த நிகழ்வினை மன்னார் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய ஆரம்பித்து வைத்து உரையாற்றியதுடன் பாடசாலை மட்டத்திலான சிறுவர் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களக்கு பரிசுகளை வழங்கிவைத்ததோடு சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் துஸ்ப்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை எற்படுத்தும் வகையிலான அமைதி பேரணி ஒன்றையும் ஆரம்பித்துவைத்தார்.
;குறித்த விழிப்புணர்வு தொடர்பான அமைதிப் பேரணியில் மன்னார் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் வினாசிதம்பி பாபாகரன்,மன்னார் பிரதேச செயலக கிரமாசேவகர்களுக்கான நிர்வாக உத்தியோகஸ்தர் திரு.ராதா பெணான்டோ ஆகியோரின் வழிநடத்தலுடன் நடைபெற்றது
மன்னார் பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட அமைதி பேரணி மன்னார் நகர் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.
இதன்போது சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பது போன்ற விழிப்புணர்வு சுலோகங்களை சிறுவர்கள் ஏந்தியவாறு அமைதிப் பேரணியில் பங்குபற்றினர்.
இன்நிகழ்வில் 18 வயதிற்குட்ப்பட்ட சிறுவர்கள்,மன்னார் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், கிராமசேவகர்கள்,சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் ,தன்னார்வுத்தொண்டு நிறவன ஊழியர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிறுவர்தின அமைதிப்பேரணி மன்னாரில் -படங்கள்
Reviewed by Author
on
November 16, 2013
Rating:

No comments:
Post a Comment