அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விவசாயிகள், கால்நடை வளர்ப்போரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு -படங்கள்

வடமாகாண விவசாய கமநல சேவைகள்,கால்;நடை அபிவிருத்தி,நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் , மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கும் இடையில் அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது.

காலை 9 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை  மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலின்  போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ,வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் உற்பட விவசாய விரிவாக்கள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள்,கால்நடை வளர்ப்போர்,விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள்,மிருக வைத்தியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்போர் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினரிடமும்,அமைச்சர்களிடமும் முன்வைத்தனர்.

-குறிப்பாக நானாட்டம்,முசலி,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள கால் நடை வளர்ப்போர் தமது கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாமையினால் தாங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள்  தொடர்பில் முன் வைத்ததோடு தமது கால்நடைகளுக்கான உரிய மேய்ச்சல் நிலத்தை ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.




























மன்னார் விவசாயிகள், கால்நடை வளர்ப்போரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு -படங்கள் Reviewed by Author on November 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.