வடக்கிலுள்ள இரு மூலிகைப் பண்ணைகளை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதேச வைத்தியர்கள் தீர்மானம்.
வடமாகாணத்திலுள்ள இரு மூலிகைப் பண்ணைகளை அபிவிருத்திசெய்வதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வடமாகாண சுதேச வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயுள்வேத வைத்தியத்துறையை மேம்படுத்தும் முகமாக மாவட்டத்திலுள்ள இரு மூலிகைப் பண்ணைகளை அபிவிருத்திசெய்வது எனவும் , நவீன வடிவமைப்பிலான சுதேச மருந்துகளை உற்பத்திசெய்வதெனவும் சுதேச வைத்தியர்கள் முடிவுசெய்துள்ளனர் .
கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் மாவட்ட ஆயுள்வேதத் திணைக்கள இணைப்பாளரும் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரியுமான வைத்தியர் சிவநேசன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஆயுள்வேத பாதுகாப்புச் சபையினரின் அனுசரணையுடன் சுதேச வைத்தியர் ஒன்றுகூடல் இடம்பெற்றது .
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தால் கல்மடு நகர் என்னும் இடத்தில் முன்னெடுக்கப்படும் 100 ஏக்கரிலான பாரிய மூலிகைப்பண்ணை மற்றும் ஆயுள்வேத பாதுகாப்புச் சபையால் மேற்கொள்ளப்படும் மூலிகைத்தோட்டம் ஆகியவற்றை அபிவிருத்திசெய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது .
அத்துடன் , நவீன வழிமுறைகளைக் கையாண்டு சுதேச மருந்துகளைத் தயாரிப்பது எனவும் கிளிநொச்சி நகரில் ஆயுள்வேத மருந்தகம் ஒன்றை ஆரம்பிப்பது என்றும் முடிவுகள் எட்டப்பட்டன . பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தும் முகமாக வைத்தியர்களுக்குப் பயிற்சி வழங்குதல் , ஆயுள்வேத வைத்தியத்துறை அபிவிருத்திக்கு வட மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சிடம் மானிய உதவிகளை வழங்கக் கோருதல் , பதிவுசெய்யாத வைத்தியர்களுக்கு கிளிநொச்சியில் பதிவுப் பரீட்சையை நடத்தக்கோருதல் , மூலிகை சஞ்சிகை வெளியீடு எனப் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன .
மேலும் , மாவட்டத்தில் சுதேச வைத்தியர்கள் ஆங்கில வைத்திய சேவைகளை நிறுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது பின்தங்கிய மாவட்ட நிலைமைகளைக் கவனத்தில் எடுத்து மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கில மருத்துவ சேவைக்கு அனுமதிக்குமாறுவைத்தியர்களால் ஏகமனதாகக் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது .
இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்பு சபைத் தலைவர் வைத்தியர் க . திருலோகமூர்த்தி , செயலாளர் வைத்தியர் சு . கணேசராஜன் , உபதலைவர் வைத்தியர் ந . ஜெயராசா ஆகியோரும் உரையாற்றினார்கள் .
வடக்கிலுள்ள இரு மூலிகைப் பண்ணைகளை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதேச வைத்தியர்கள் தீர்மானம்.
Reviewed by NEWMANNAR
on
November 26, 2013
Rating:

No comments:
Post a Comment