CHOGM மாநாட்டில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் கடுமையான கேள்விகளை எழுப்ப வேண்டும்
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை இலங்கை நடத்தவுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் நாடுகள் இந்த அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சமாதானம், நீதிக்கான இலங்கை இயக்கம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிந்தவுடன் பொறுப்புக்கூறல் தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படுமாயின் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கு நிகழ்ச்சி நிரல் இடப்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டதாக ஐநா ஆய்வு கூறுகிறது. 6000 பேர் காணாமல் போயுள்ளனர். எனவே இலங்கைக்கு அவசியம் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தங்களை விமர்சிப்பவர்களை அமைதியாக்கி, ஊடகங்களை கவனமாக கையாண்டு, சிவில் குழுவினரை கீழ்நிலைப்படுத்தி அமைதியான நல்லிணக்கத்தை காண்பிக்க இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக சமாதானம், நீதிக்கான இலங்கை இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்றும் ஊடகவியலாளர்கள் கடுமையான கேள்விகளை கேட்க வேண்டும் என்றும் அதற்கு இலங்கை பொதுநலவாய குழுவினர் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
CHOGM மாநாட்டில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் கடுமையான கேள்விகளை எழுப்ப வேண்டும்
Reviewed by Author
on
November 12, 2013
Rating:

No comments:
Post a Comment