அமைச்சர் மட்ட கூட்டங்கள் தொடர்பில் பிரித்தானியா விரக்தி
பொதுநலவாய அமைச்சர்மட்ட நடவடிக்கைக்குழு அதன் கூட்டங்களில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள்பற்றி கூடுதல் ஆழமாக நோக்க தவறியுள்ளது என்பதையிட்டு பிரித்தானியா விரக்தியடைந்துள்ளதாக பிரித்தானியா கூறியுள்ளது.
விசனத்துக்குரிய விடயங்களை விசேடமாக பொதுநலவாய அங்கத்தவர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு மட்டத்தில் பொதுநலவாய நியமனங்களை நிறைவேற்ற தவறும் விடயங்களை பொதுநலவாயம் கவனிக்க வேண்டுமென்பதனை பொதுநலவாய அமைச்சர்மட்ட நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் மத்தியில் நாம் வலியுறுத்தியிருந்தோம். ஆயினும், இது நடைபெறவில்லை என்பதையிட்டு நாம் விரக்தியடைகின்றோம் என சிரேஷ்ட இராஜங்க அமைச்சர் சயீடா வரஸி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கூறினார்.
ஐக்கிய இராஜ்ஜியம் பொதுநலவாய அமைச்சர்மட்ட நடவடிக்கைக்குழு உறுப்பினர் அல்லஇ இவ்வருடம் 26இசெப்டம்பரில் பொதுநலவாய வெளிநாட்டமைச்சின் கூட்டத்தில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையை ஐக்கிய இராஜ்ஜியம் கருத்தாடல் செய்ததாக அவர் கூறினார்
அமைச்சர் மட்ட கூட்டங்கள் தொடர்பில் பிரித்தானியா விரக்தி
Reviewed by Author
on
November 11, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment