ஆன்மீக சிந்தனை உள்ள சமுதாயமாக எமது பிள்ளைகள் மிளிரவேண்டும்' வதிரியில் சிறீதரன் எம்.பி [படங்கள் இணைப்பு]
கரவெட்டி நெல்லியடியைச்சேர்ந்த அமரர் சு ஆறுமுகம் நினைவாக அவரது குடும்பத்தினரால்
அமைக்கப்பட்ட ஆலங்கட்டை இந்து மயானத்துக்கான நுழைவாயில் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே மேற்படி கூறியுள்ளார் .
மயானங்கள் என்பன புனிதமானவை அவை என்றைக்கும் பேணப்படவேண்டும் .
இம்மயானத்தைப் பார்க்கிறபோது என்னுள் எதோ ஒன்று ஆர்ப்பரித்து நிற்பதை உணர்கின்றேன் .2009 ற்கு முன்னரான எமது வாழ்வின் அர்ததங்களை உணர்த்துவதாக எண்ணுகின்றேன் .
உண்மையிலேயே ஆலயங்கள் அமைப்பது பாடசாலைகளை அமைத்தல் மயானங்களைப்பேணுதல் என்பன புனிதமான பணி இப்பணியில் இடர்கள் ஏற்ப்பட்டால் அதனை எதிர் கொள்ள தயாராக இருக்கவேண்டும் . அது மட்டுமன்றி மதரீதியான நம்பிக்கை எமது பிள்ளைகளிடையே உருவாக்கப்படவேண்டும் எனவும் கூறினார் .
மயான பராமரிப்புச்சபையின் தலைவர் திரு . சுப்பிரமணியம் , தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ வியாகேசு , சபையின் உறுப்பினர்கள் , வடமாகாணசபை உறுப்பினர்களான ப . கஐதீபன் , சிவயோகன் மற்றும் கிராம அலுவலர்கள் , அமரர் ஆறுமுகத்தின் பாரியார் , எனப்பலரும் கலந்து கொண்டனர் .
ஆன்மீக சிந்தனை உள்ள சமுதாயமாக எமது பிள்ளைகள் மிளிரவேண்டும்' வதிரியில் சிறீதரன் எம்.பி [படங்கள் இணைப்பு]
Reviewed by Admin
on
December 23, 2013
Rating:

No comments:
Post a Comment