அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மீனவர்கள் 59 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

தூத்துக்குடி மாவட்டம் தேமல் நகர் பொலிஸார் தாம் கைது செய்த இலங்கை மீனவர்கள் 59 பேர் மீது இராமநாதபுரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான சகல ஒழுங்குகளையும் செய்துள்ளனர். 

 இலங்கை அரசாங்கம் தம்வசமுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமென எதிர்ப்பார்த்து இலங்கை மீனவர்களை விடுவித்துவந்த தமிழ்நாடு அரசாங்கம் இப்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை மீனவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தயாரித்துள்ளது.

 தற்போது புழல் மத்திய சிறையிலுள்ள இந்த மீனவர்கள் நீர்கொழும்பு,புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய இடங்களைச்சேர்ந்தவர்கள் இவர்கள் ஜனவரி 3 ஆம் திகதி வரையிலும் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

 இவர்கள் கன்னியக்குமாரி கடலுக்கு அப்பால் கடலில் கரையோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

 தூத்துக்குடி மீன்பிடித்துறைமுக உதவிப் பணிப்பாளர், இலங்கை மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரோலர்கள் நல்ல நிலையில் இருப்பதாக உறுதி செய்துள்ளனர்.
இலங்கை மீனவர்கள் 59 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை Reviewed by Admin on December 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.