அண்மைய செய்திகள்

recent
-

உலக எயிட்ஸ் தினம் இன்று

உலகலாவிய ரீதியில் வல்லரசுகளை கூட ஆட்டம் காண செய்யும் கொடூர நோய்…… 

 எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சமூக விரோதிகள் அல்லர்….. 

 அவர்களும் சமூகத்தின் பங்காளர்களே……. 

 மனிதனின் சீர்கேடான சுகாதார நடத்தைகளால் தனக்கு தானே தேடிக் கொள்ளும் சாபக் கேடு எயிட்ஸ் நோயாகும். 1987 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தால் டிசெம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 

 உலக எயிட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தொனிப் பொருளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எயிட்ஸ் நோயினால் ஏற்படும் அநாவசிய உயிர் இழப்புக்களை தவிர்ப்பதற்கும் எயிட்ஸ் நோய் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கும் ஆண்டு தோறும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 எயிட்ஸ் நோயை தடுப்பதற்கு மாத்திரமின்றி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் சமூகத்தின சக மனிதர்களாக நோக்க வேண்டும் என்பதற்காகவும் இன்றைய தினம் உலக எயிட்ஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 

 இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 649 பேர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 307 பேர் உயிரிழந்துள்ளனர் முறையற்ற வகையில் பாலியல் விடயங்களில் ஈடுபடுகின்றமைமே எயிட்ஸ் நோய் ஏற்படுவதற்கான பிரதான காரணமாகும். எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி எயிட்ஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

 அதேபோல எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் நமது சமூகத்தின் சக மனிதர்கள் என எண்ணி அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது நமது கடற்பாடாகும்.
உலக எயிட்ஸ் தினம் இன்று Reviewed by NEWMANNAR on December 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.