சிவிற் சென்டர் கிராம மக்கள் மின்சாரம் இன்றி அவதி
கிளிநொச்சி, வட்டக்கச்சி, சிவிற் சென்டர் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 சிவிற் சென்ரர் கிராமத்தில் தற்போது 34 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சிப் பகுதிக்கான மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் இடைப்பட்ட பகுதியாக காணப்படும் சிவிற் சென்ரர் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.
 இடைப்பட்ட பகுதியிலிருக்கும் எமக்கு விரைவில் மின்சாரம் பெற்றுத் தரும்படி அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவிற் சென்டர் கிராம மக்கள் மின்சாரம் இன்றி அவதி
 
        Reviewed by Admin
        on 
        
December 24, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
December 24, 2013
 
        Rating: 


No comments:
Post a Comment