அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு காசோலைகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலமாக 75 மில்லியன் ரூபா நிதியுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புக்கள் மதிப்பீடு செய்யப்பட்டமைக்கு அமைய, முதற்கட்டமாக 32 பேர் நிதியுதவிக்கான காசோலைகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இயற்கை அனத்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கு நிதிக் கொடுப்பனவு கட்டம் கட்டமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலத்தில் அந்த மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார், மேலதிக அரசாங்க அதிபர சி.சிறினிவாசன், அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் கு.சகுணதாஸ், கரைச்சிப் பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு காசோலைகள்
Reviewed by Admin
on
December 27, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment