மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் உள்ள மனித புதை குழியை இருபத்தெட்டாம் திகதி வரை மீட்பு பணி தொடர உத்தரவு. [படங்கள் இணைப்பு]
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இது வரை 10 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மூன்றாவது நாளாக குறித்த மனித புதை குழி உள்ள இடத்திற்குச் சென்று பார்வையிட்டதோடு எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை அப்பகுதியில் தோண்டி மனித எழும்புக்கூடுகளை மீட்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார் .
மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமையினை தொடர்ந்து குறித்த பகுதிக்கு மறு தினம் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் சென்று பார்வையிட்டதோடு அவர் முன்னிலையில் மனித புதை குழிகள் தோண்டும் பணிகள் இடம் பெற்றது .
இதன் போது 10 இற்கும் மேற்பட்ட மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . ஒரு சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாக மீட்கப்பட்டது . பல முழுமையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் தொடர்ச்சியாக மனித எழும்புக்கூடுகள் தொடர்ச்சியாக கண்டு பிடிக்கப்பட்டு வருவதினால் சட்ட வைத்திய நிபுனரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார் .
இந்த நிலையில் சட்ட வைத்திய நிபுனருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் மனித புதை குழி தோண்டப்பட்டு முழுமையாக குழியினுள் காணப்பட்ட மனித எழும்புக்கூடுகளை இன்று திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் நேரில் சென்று பார்வையிட்டார் .
இந்த நிலையில் நீதவானின் உத்தரவிற்கமைவாக அனுராதபுர சட்ட வைத்திய நிபுனர் வைத்திய ரெட்ண இன்று திங்கட்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தார் .
மனித எழும்புக்கூடுகளை பார்வையிட்ட சட்ட வைத்திய நிபுனர் குறித்த மனித எச்சங்கள் வீதிக்கரைகளில் இருப்பதினால் வீதியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளவும் , அருகில் உள்ள காடுகளை அகற்றி பணிகளை தொடர வேண்டும் தெரிவித்தார் .
இந்த நிலையில் குறித்த வீதியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிக்கு உத்தரவிட்டதோடு குறித்த பகுதிகளில் உள்ள காடுகளை துப்பரவு செய்ய போதியளவு உழியர்களை தயார் படுத்துமாறும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி விஜய சேனக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது .
எதிர் வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் குறித்த மனித புதைகுழிகள் காணப்படுகின்ற இடத்தில் அகழ்வுகளை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டதோடு இன்று திங்கட்கிழமை மாலை முதல் சனிக்கிழமை வரை குறித்த பகுதிக்கு உரிய பாதுகாப்புக்களை வழங்குமாறும் மனித எச்சங்கள் அகழும் வரை திடீர் என ஏற்படக்கூடிய மழை , வெயில் ஆகியவற்றில் இருந்து அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் .
இதன் போது சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த , வடமாகாண அமைச்சர் சட்டத்தரணி பா . டெனிஸ்வரன் , வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ஆகியோரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் உள்ள மனித புதை குழியை இருபத்தெட்டாம் திகதி வரை மீட்பு பணி தொடர உத்தரவு. [படங்கள் இணைப்பு]
Reviewed by Admin
on
December 23, 2013
Rating:
Reviewed by Admin
on
December 23, 2013
Rating:










No comments:
Post a Comment