அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேசத்தை தம் பக்கம் இழுக்க அரசும் கூட்டமைப்பும் போட்டி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் சர்வதேச நாடுகளை தம் பக்கம் இழுப்பதற்காக அதிவேக நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முனைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் மட்ட குழுக்களை அனுப்புவதற்கு ஏற்பாடுகளை அரசாங்கம் கையாண்டு வருகிறது. 'ஏனைய நாடுகளில் அவர்களை எமது அமைச்சர் மட்ட குழுக்கள் சந்திப்பதற்கு நேரம் கேட்டிருக்கின்றோம்' என்று அரசாங்க தகவல்கள் குறிப்பிடுகின்றன.

'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அதிகமானவற்றை நிறைவேற்றியிருக்கின்றோம். சிலவற்றை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பு தேவை' என்றும் அத்தகவல்கள் சுட்டிக்காட்டின.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு முன் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கின்றது.

'காணிகள், மீள்குடியேற்றம், காணாமல் போனோர், இராணுவ பிரசன்னம் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்த அரசாங்கம் தவறிவிட்டது. உண்மை நிலையை சர்வதேசத்துக்கு சொல்ல வேண்டும்.

அரசாங்கம் இந்த விடயங்களில் மேலும் தாமதித்தால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் சர்வதேச குற்றவிசாரணையை நடத்த நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லியிருக்கின்றன' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

'மேற்படி விடயங்களில் கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது. இது குறித்து நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக் கூறுவோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் இலங்கை வரவுள்ள அமெரிக்க துணைச் செயலாளர் நிஷா தேசாங் பிஸ்வாலையும் சந்திக்கும் நோக்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளது' என்றும் சுரேஷ் எம்.பி மேலும் கூறினார்
சர்வதேசத்தை தம் பக்கம் இழுக்க அரசும் கூட்டமைப்பும் போட்டி Reviewed by Author on December 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.