மன்னார் வலயத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற ஏழு அதிபர்களுக்கும், முன்னாள் மன்னார் கோட்டக் கல்வி பணிப்பாளருக்குமான பிரியாவிடை நிகழ்வு -படங்கள்
இன்று ( 28.12.2013 ) மாலை 7.00 மணிக்கு மன்னார் வலயத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற ஏழு அதிபர்களுக்கும், முன்னாள் மன்னார் கோட்டக் கல்வி பணிப்பாளருக்குமான பிரியாவிடை நிகழ்வு மன்னார் ஆஹாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை மன்னார் வலய அதிபர் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்நிகழ்விற்கு மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. எம்.எம்.எம். ஸியான் அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்வின் முதலாவதாக அழைக்கப்ட்டிருந்த ஓய்வு பெற்ற அதிபர்கள், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் அனைவர்களையும் அதிபர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வரவேற்புரையை அதிபர் சங்கத் தலைவர் திரு. இருதயராசா குரூஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. பின்பு நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருத ஓய்வு பெற்ற அதிபர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் நினைவுப் சின்னங்களும் வழங்கப்பட்டன. இதன் பிறகு ஏற்புரை குறித்த அதிபர்களால் ஆற்றப்பட்டது. சிறப்புரை வலயக் கல்விப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்படடது. நன்றியுரை அதிபர் சங்கச் செயலாளர் திரு. செல்வ ரஞ்சன் அவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்வுகளை திரு. எப்.எஸ்.டி. லெம்பட் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இராப்போசன விருந்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
மன்னார் வலயத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற ஏழு அதிபர்களுக்கும், முன்னாள் மன்னார் கோட்டக் கல்வி பணிப்பாளருக்குமான பிரியாவிடை நிகழ்வு -படங்கள்
Reviewed by Admin
on
December 29, 2013
Rating:
No comments:
Post a Comment