வறிய மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகள் ஆரம்பிப்பு
வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மன்னார் கல்வி வலயத்திலுள்ள 85 பாடாசாலைகளைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு வங்கிப் புத்தகங்களும் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தரம் 01 முதல் 05வரையான மாணவர்களுக்கு 500 ரூபாவும் தரம் 06 முதல் 11 வரையான மாணவர்களுக்கு 1,000 ரூபாவும் உயர்தர மாணவர்களுக்கு 2,000 ரூபாவுமாக 09 மாதங்களுக்கான கொடுப்பனவுகள் வடமாகாண ஆளுநர்; நிதியத்தின் கீழ் வைப்பிலிடப்பட்டுள்ளன.
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் மன்- முருங்கன் ம.வி.பாடசாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வறிய மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகள் ஆரம்பிப்பு
Reviewed by Admin
on
January 10, 2014
Rating:

No comments:
Post a Comment