மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்கள்,சாரதிகள் பணிப்பகிஸ்கரிப்பு. [படங்கள் இணைப்பு]
வவுனியா நகர சபை ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து
மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகள் மற்றும் நகர சபை ஆகியவற்றில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்கள் மற்றும் சாரதிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர் .
நிரந்தர நியமனம் வழங்கக்கோரி வவுனியாவில் அடையாள வேளை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது . இதனடிப்படையிலே மன்னார் மாவட்ட பணியாளர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர் .
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு முன் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஒன்று திரண்ட சுகாதார ஊழியர்கள் மற்றும் சாரதிகள் சுலோகங்களை ஏந்தியவாறு அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர் .
சுமார் 7 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றுகின்ற தம்மை இதுவரை நிரந்தராமக்காமையினை கண்டித்து குறித்த அடையாள பணிப்பகிஸ்கரிப்பு இடம் பெற்றது .
தற்போது நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கா.பொ.த. சாதாரண தரத்தில் 6 பாடங்களும் இரண்டு பாடங்களில் ' சி ' சித்தி தேவை எனவும் கூறப்பட்டுள்ளது .
இந்த தகமை அடிப்படையில் இனிமேல் எதிர்வருங்காலங்களில் சேவைக்கு அமர்த்தப்படுபவர்களிடம் கொரும்படியும் , தற்போது சேவையில் உள்ளவர்களிடம் எதிர்பார்க்க வேண்டாம் எனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் .
- இந்த பகிஸ்கரிப்பில் மன்னார் நகர சபை , மன்னார் பிரதேச சபை , நானாட்டான் பிரதேச சபை , மாந்தை பிரதேச சபை , முசலி பிரதேச சபை ஆகியவற்றில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்கள் மற்றும் சாரதிகள் சுமார் 60 பேர் வரை இணைந்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர் .
இதன் போது மன்னார் நகர சபை தலைவர் எஸ் . ஞானப்பிரகாசம் , நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் ஆகியோர் அவ்விடத்திற்குச் சென்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கலோடு கலந்துரையாடினர் .
இதன் போது காலை 10.30 மணியளவில் அவ்விடத்திற்குச் சென்ற வடமாகாண அமைச்சர் பா . டெனிஸ்வரன் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினார் .
இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்த நிலையில் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது .
சுகாதார தொண்டர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமையினால் மன்னார் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை சுத்திகரிபுப்பணிகள் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்கள்,சாரதிகள் பணிப்பகிஸ்கரிப்பு. [படங்கள் இணைப்பு]
Reviewed by Admin
on
January 10, 2014
Rating:

No comments:
Post a Comment