மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகைத்தந்துள்ள மாலைத்தீவு நாட்டின் புதிய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் இன்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.
இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமிடையில் காணப்படும் பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாடுகள் தொடர்பில் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் வர்த்தக தொடர்பாடல் மீளாய்வு மற்றும் வர்த்தக ஆணைக்குழு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மாலைத்தீவு நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட இன்னோரன்ன விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன்,இலங்கையில் புதிய முதலீடுகள் பற்றியும்,உல்லாசப்பயணத் துறைக்கான இன்னோரன்ன வசதிகள் மேம்பாடு பற்றியும் கருத்துப் பறிமாறப்பட்டது.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி,கைத்தொழில்,வர்த்தக துறை பிரதி அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா,அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன,ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் பந்துல எகடகேயும் கலந்து கொண்டனர்
மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு
Reviewed by NEWMANNAR
on
January 21, 2014
Rating:
No comments:
Post a Comment