4,50,000 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம்.
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 4 இலட்சத்து 50ஆயிரம் பேர் பார்வைக் குறைபாட்டுக்கு உள்ளாகும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது
.
அதேநேரம் , ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பாடசாலைப் பிள்ளைகள் பார்வைக் குறைபாட்டுக்கு உள்ளாகி இருப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது .
இதேவேளை , இந்நாட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வளர்ந்தவர்கள் பார்வையை இழந்துள்ளனர் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது .
இந்நாட்டில் கண்பார்வையை இழந்துள்ளவர்களுக்குக் கண்பார்வையைப் பெற்றுக் கொடுப்பதையும் , கண்பார்வைக் குறைபாட்டுக்குள்ளாவோரை அவ்வச்சுறுத்தலிலிருந்து விடுவிப்பதையும் நோக்கமாகக் கொண்டே சுகாதார அமைச்சு விஷன் 2020 வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது .
இத்திட்டத்தின் கீழ் கண்ணில் வெள்ளை படர்ந்திருப்பதன் காரணமாக கண் பார்வையை இழந்துள்ள 1000 ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இவ்வருடம் சத்திர சிகிச்சை மூலம் விழிவெண்படலத்தை அகற்றி பார்வையை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது .
4,50,000 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம்.
Reviewed by NEWMANNAR
on
January 21, 2014
Rating:

No comments:
Post a Comment