அண்மைய செய்திகள்

recent
-

மன்/புத்/ஆப்தீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தரம் ஒன்று மாணவர் அனுமதிக்கும் நிகழ்வும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவருக்கான பாராட்டு நிகழ்வும்.

மன்/புத்/ஆப்தீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 2014 ம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களைப் பாடசாலையில் அனுமதிக்கும் தேசிய நிகழ்வை முன்னிட்டு 2014.01.16 இன்று புத்தளம் தம்பபன்னியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஆ.ஆ. ஸியான் அவர்களும் சிறப்பு அதிதியாக முசலி பிரதேச சபையின் பிரதித் தலைவர் ஜனாப் ளு.ஆ. பைரூஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

 இந் நிகழ்வில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஆ.ஆ. ஸியான் அவர்கள் உரையாற்றுகையில் அவையினரை விழித்தவராக இப்பாடசாலை 2007.01.02 இல் ஆரம்பிக்கப்பட்டு இன்று முன்னேறி ஒரு உயர்ந்த நிலைக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் குறைந்த வளங்களுடனும் குறைந்த மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையானது கௌரவ அமைச்சர் அல் ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்களின் அயராத முயற்சியினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மாணவர்களின் கல்வி நலன் கருதி இப்பாடசாலை உட்பட புத்தளம் மாவட்டத்தில் ஆறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

 இந்த வகையில் இப்பிரதேசத்தில் பாடசாலை அமைவதற்கு சகல வழிகளிலும் ஒத்தாசையாக இருந்த புத்தள மக்களுக்கு தனது நன்றியறிதலை நினைவு கூறுகிறேன் என குறிப்பிட்டார். எனினும் இப்பாடசாலையானது வளப்பற்றாக்குறையுடன் காணப்பட்டபோதிலும் கல்வியில் முன்னேறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. மேலும் இப்பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் விரைவில் நிவர்த்திக்கப்படும் அத்தோடு ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகக் குறிப்பிட்டார்.

 மேலும் இப்பாடசாலையை ஆரம்பிப்பதற்காக அரும்பணியாற்றிய கௌரவ அமைச்சர் அல் ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதாகவும் குறிப்பிட்டார் மேலும் இந்த சின்னஞ்சிறிய பிஞ்சுகள் நாளைய வைத்தியராகவோ பொறியியலாளராகவோ சட்டத்தரணியாகவோ மேலும் பல்துறை விற்பன்னர்களாகவோ வருவதற்கு ஆசிரியர்களின் வழிகாட்டல் மிகவும் முக்கியமானதாகும்.

 இந்த மாணவச் செல்வங்கள் உங்களின் அமானிதச் சொத்துக்களாகும் மேலும் இவர்கள் களிமண்ணைக் கொண்டு குயவன் பாத்திரங்களை தயாரிப்பது போல ஆசிரியர்கள்தான் மாணவர்களை இனங்கண்டு உரிய துறைக்கு ஆற்றுப்படுத்த வேண்டும் எனவும் இன்று பாடசாலையில் இணைந்த மாணவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்க பிரார்த்திப்பதாக வேண்டி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.



மன்/புத்/ஆப்தீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தரம் ஒன்று மாணவர் அனுமதிக்கும் நிகழ்வும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவருக்கான பாராட்டு நிகழ்வும். Reviewed by Admin on January 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.