அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மட்டு.ஆயர் பாதுகாப்பு செயலரிடம் கோரிக்கை - படங்கள்

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கும் அல்லது அவர்களுக்கு புனர்வாழ்வழிப்பதற்கு ஆவன செய்யுமாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


கடந்த வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி யோசப் பொன்னையாவுக்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்குமிடையில் ஆயரில்லத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

இச் சந்திப்பு தொடர்பில் ஆயரில்ல செய்தித் தொடர்பாளர் எஸ்.மைக்கல் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகள், மட்டக்களப்பு மாவட்ட பொருளாதாரம், மற்றுமு; மாவட்டம் தொடர்பாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரிடம் பேசியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தன்னிடம் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைவாக, சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கும், பொது மன்னிப்பு வழங்குவதற்கும் அல்லது அவர்களுக்கு புனர்வாழ்வழிப்பதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாவட்டமாகவே காணப்படுகிறது. இந்த மாவட்டத்தில் தொழில் வாய்ப்பு இன்மையும், பொருளாதார அபிவிருத்தி குறைந்த நிலையும் காணப்படுகிறது. இங்கு போதுமான வளங்கள் இருந்தும், பொருளாதார வசதியின்மையால் அமைப் பயன்படுத்த முடியவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமய ரீதியாகவும், சமூக ரீதியாகவும், நல்ல உறவு நிலை காணப்படுகிறது. பிரச்சினைகள் தோன்றும் போது ஒன்றிணைந்து தீர:வு காணப்படுகிறது.

பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிசாரின் ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. இதற்கு வாகரை ஆலய நிர்மாணிப்பு மற்றும் தேசிய ஒளிவிழா நிகழ்வுகளை சுட்டிக்காட்ட முடியும் எனவும் ஆயர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதை தாம் அதிகம் விரும்புவதாகவும், அவ்வாறு புனர்வாழ்வு பெற விரும்பும் தமிழ் அரசியல் கைதிகள் வழக்கறிஞர் ஊடாக தங்களின் சம்மதத்தை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதே நேரம், இவ்வருடம் 100 அபிவிருத்தித் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் ஆயரிடம் தெரிவித்தார்.






தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மட்டு.ஆயர் பாதுகாப்பு செயலரிடம் கோரிக்கை - படங்கள் Reviewed by Admin on January 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.