அண்மைய செய்திகள்

recent
-

கல்பிட்டி இருந்து மன்னார் செல்லும் தனியார் பஸ் கட்டணம் அதிகரிப்பு - மக்கள் விசனம்

கல்பிட்டியில் இருந்து இலவங்குளம்.ஓயாமடுவ பாதை ஊடாக மன்னார் நோக்கி செல்லும் சில  தனியார் பஸ்களின் நடத்துனர்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நியமித்த கட்டணத்தினை விட அதிகமாக பெறப்படுவதாக பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 

கட்டணம் அதிகமாக பெறுவது குறித்து மக்கள் உரியவரிடம் வினவினால் நீங்கள் விருப்பம் என்றால் பஸ்களில் வரலாம் இல்லை என்றால் இறங்கி விடலாம் என பிரயாணிகளிடம் நடத்துனர் அனாகரினமான முறையில் நடந்து கொள்கின்றனர். 

அதே போன்று பணத்திற்கான கட்டண சீட்டையும் கொடுப்பது இல்லை போக்குவரத்து ஆணைகுழுவினால் நடைமுறை படுத்தப்பட்ட கட்டண பட்டியலையும் மக்களின் பார்வைக்கும் தொங்க விடுவதில்லை அதே வேளை போகும் நேரத்தில் இடை நடுவில் இவ் பஸ்கள் பழுதடைகின்றன இதுகுறித்தும் கவலை தெரிவிக்கின்றனர். 

மக்களின் நலன் குறித்து மன்னார் போக்குவத்து ஆணைக்குழு மற்றும் சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்களின் ஆதங்கம்.



கல்பிட்டி இருந்து மன்னார் செல்லும் தனியார் பஸ் கட்டணம் அதிகரிப்பு - மக்கள் விசனம் Reviewed by Admin on January 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.