இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் புகைத்தல் அற்ற நாளையும் ஆரோக்கியமான வாழ்வும் எனும் தொனிப்பொருளில் நிகழ்ந்த நடைபவனி - படங்கள்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் நிகழ்ந்த நடைபவனி
இன்று ( 17.01.2013) காலை 9 மணியளவில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து புகைத்தல் அற்ற நாளையும் ஆரோக்கியமான வாழ்வும் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நடாத்தப்பட்டது.
இந்நிகழ்விற்காக அனுசரணையானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியதுடன் இந்த நடைபவனியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர், ஆளுநர்சபை உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் அலுவலக உத்தியோகஸ்தர்களும் பங்கேற்றுசிறப்பித்திருந்தனர்.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஹில்றோய் பீரிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நடைபவனி இன்றய தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒலி பெருக்கி மற்றும் பதாகைகள் மூலமாக விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றதுடன். இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால்;விழிப்புணர்வுகளை தாங்கிய ஸ்ரிக்கரகளும் பிரதான நகரிலுள்ள சகல கடைகள் மற்றும் பஸ் தரிப்பு நிலையம் உட்பட பஸ் வண்டிகள், ஆட்டோக்கள் என்பனவற்றில் செஞ்சிலுவை தொண்டர்களினால் ஒட்டப்பட்டன.
மேலும் இந்த நடைபவணியில் அல்லஸார் தேசிய பாடசாலை மாணவர்கள், மற்றும் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆகியோருடன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர் குடும்பநல உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.
இந்த நடைபவணி வாயிலாக மக்களுக்கு பின்வரும் விழிப்புனணர்வு செய்திகள் சென்றடைந்தன
மற்றவர்கள் புகைக்கும் புகையை உள்ளெடுப்பதை தடுத்துக் கொள்ளுங்கள்
*புகைத்தல் வாய் புற்றுநோயை தோற்றுவிக்கக்கூடியது
*புகைத்தல் பாலியல் பலவீனத்தை ஏற்படுத்தும்
*புகையிலையில் 4000த்திற்கும் மேற்பட்ட உடலுக்கு தீங்கிளைக்கும் நச்சுப்பொருட்கள் உண்டு
*புகைத்தலினால் சிறுவர்களுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படும்
*புகைத்தலினால் உதடு நுனிவிரல்கள் கறுப்படைவதுடன் புண்களும் ஏற்படும்
*புகைத்தல் மாரடைப்பை ஏற்படுத்தும்
*பொது இடங்களில் புகைத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்
*மேலதிக பணத்தை சேமிக்க புகைத்தலை கைவிடுவோம்
*புகைத்தலால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையும்
*புகைத்தலுக்கு முற்றுப்புள்ளிவைப்போம்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் புகைத்தல் அற்ற நாளையும் ஆரோக்கியமான வாழ்வும் எனும் தொனிப்பொருளில் நிகழ்ந்த நடைபவனி - படங்கள்
Reviewed by Admin
on
January 17, 2014
Rating:
No comments:
Post a Comment