அண்மைய செய்திகள்

recent
-

வெற்றிச்செல்வி (செல்வி வேலு.சந்திரகலா) அவர்களின் துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும் கவிதைநூல் வெளியீடு நிகழ்வு - படங்கள்

வெற்றிச்செல்வி (செல்வி வேலு.சந்திரகலா) அவர்களின் துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும் கவிதைநூல் தைமாத முழுநிலா நாளன்று (15.01.2014) கலையருவி மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் எழுத்தாளர் பேரவையினர் ஒழுங்குபடுத்திய நிகழ்வு, மன்னார் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் துரையூரான் திரு.எம்.சிவானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் முதல் பிரதியை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை பகுதிநேர விரிவுரையாளர் திரு.ம.ந.கடம்பேஸ்வரன் (காப்பியதாசன்) அவர்கள் வெளியிட்டுவைக்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

 மன்னார் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும் எனும் கவிதைநூலின் மதிப்பீட்டுரையினை ஊடகவியலாளர் திரு.பொ.மாணிக்கவாசகம் அவர்கள் நிகழ்த்தினார்.(இவரின் ஏனைய நூல்கள் பற்றிய உணர்வுப் பகிர்வுகளையும், பார்வைப் பகிர்வுகளையும் நாவலாசிரியர் திரு.எஸ்.ஏ.உதயன், சைபர்சிற்றி பதிப்பக உரிமையாளர் திரு.சதீஸ், எழுத்தாளர் கானவி, கவிஞர் வேல் லவன் ஆகியோர் நிகழ்த்தினர்.)

போராளியின் காதலி எனும் நாவல் பற்றிய பார்வைப் பகிர்வினை நாவலாசிரியர் திரு.எஸ்.ஏ.உதயன் அவர்களும் ஈழப்போரின் இறுதிநாட்கள் பற்றிய உணர்வுப் பகிர்வினை சைபர்சிற்றி பதிப்பக உரிமையாளர் திரு.சதீஸ் அவர்களும் காணாமல்போனவனின் மனைவி, முடியாத ஏக்கங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் பற்றிய பார்வைப் பகிர்வினை எழுத்தாளர் கானவி அவர்களும் இப்படிக்கு அக்கா, இப்படிக்கு தங்கை பற்றிய கவிதைத்தொகுதிகள் பற்றிய உணர்வுப்பகிர்வை கவிஞர் வேல் லவன் அவர்களும் நிகழ்த்தினார்கள்.

ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நூல்களின் ஆசிரியர் செல்வி வெற்றிச்செல்வி அவர்கள் நிகழ்த்தினார்.











































வெற்றிச்செல்வி (செல்வி வேலு.சந்திரகலா) அவர்களின் துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும் கவிதைநூல் வெளியீடு நிகழ்வு - படங்கள் Reviewed by NEWMANNAR on January 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.