அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மீள் குடியேற்றக்கிராமங்களில் உள்ள வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை தொடர்ந்தும் வழங்கி வரும் பிரபல வர்த்தகர் இ.சாள்ஸ்



யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை மன்னார் மாவட்டத்தின் பிரபல வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் தொடர்ந்தும்  வழங்கி வருகின்றார்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீள் குடியேற்றக் கிராமங்களான சன்னார்,ஈச்சளவக்கை, பெரிய மடு ஆகிய மூன்று கிராமங்களுக்கும் கடந்த 30 ஆம் திகதி விஜயம் செய்த பிரபல வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ்   சுமார் 500 மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதி வய்ந்த பாடசாலை உபகரணங்களை பங்கீடு செய்து வழங்கி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று முந்தினம் மன்னார் நூறு வீட்டுத்திட்டம் மற்றும் மன்னார் முப்பது வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களுக்குச் சென்ற  வர்த்தகர்  இருதயநாதன் சாள்ஸ் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்களை சுமார் 100 மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

நீண்ட நாட்களாக   குறித்த  கிராமங்களில்  உள்ள வறிய மாணவர்கள் தமது பாடசாலை கல்வி கற்றலுக்கு தேவையான  உபகரணங்களின்றி பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்.

இவ்விடையம் தொடர்பாக குறித்த சமூக சேவகரும் பிரபல வர்த்தகருமான இருதயநாதன் சாள்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் குறித்த மாணவர்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்ட குறித்த வர்த்தகர் உடனடியாக குறித்த கிராமங்களுக்குச் சென்று அந்த வரிய மாணவர்களுக்கு தன்னால் இயன்ற கற்றல் உபகரணங்களை வழங்கி இந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவி புறிந்தார்.

-குறித்த வர்த்தகரின் செயற்பாட்டிற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  




மன்னாரில் மீள் குடியேற்றக்கிராமங்களில் உள்ள வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை தொடர்ந்தும் வழங்கி வரும் பிரபல வர்த்தகர் இ.சாள்ஸ் Reviewed by Admin on January 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.