'கடல் தாமரை' போராட்டத்திற்கு சுஷ்மா தலைமைதாங்குவார்: ராதாகிருஷ்ணன்
.jpg)
இது குறித்து திருச்சி வைத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனக்கு பக்க பலமாக இருந்த ஒரே காரணத்திற்காக தமிழர்களை மொத்தமாக இலங்கை அரசு கொன்று குவித்தது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை பாமகவுடன் பேசி வருகிறோம். ம.தி.மு.க.வுடன் ஏற்கனவே பேசி விட்டோம்.
அக்கட்சி பா.ஜ.கவுக்கு ஆதரவு அளிக்கிறது. தே.மு.தி.க.விடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம். கேப்டன் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஜனவரி மாத மத்தியில் சென்னைக்கு விஜயம் செய்வார்.
லோக்சபா தேர்தலுக்கு தமிழக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. விரைவில் அனைத்து நடைமுறைகளையும் முடிப்போம். பெப்ரவரி மாதத்தில் இது முடிவடையும். மார்ச் மாதத்திலிருந்து இன்னும் வேகம் பிடிக்கும் என்றார் அவர்.
'கடல் தாமரை' போராட்டத்திற்கு சுஷ்மா தலைமைதாங்குவார்: ராதாகிருஷ்ணன்
Reviewed by Author
on
January 06, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment