அண்மைய செய்திகள்

recent
-

இன்றும் திருக்கேதீஸ்வரத்தில் ஒரு மனித மண்டை ஓடு கண்டுபிடிப்பு –படங்கள்

மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனிதபுதைக் குழி அகழ்வு இவ்வாரம் தொடர்ச்சியாகநடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் இன்றும் மேலும் ஒரு மண்டையோடுகண்டுபிடிக்கப் பட்டடுள்ளது. இதைதொடர்ந்து மனித எலும்புக்குகூடுகளின் தொகை 43 ஆக உயர்ந்துள்ளது.

மனிதபுதைகுழியை அகலமாக்கி அகழ்வுக்காக உடைக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் ஆலயம் மாந்தைவீதியை இன்று அகழ்வுசெய்தபோதே இன்று குறித்த மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது
புனரமைக்கப்பட்ட வீதிக்கு அடியிலிருந்து  மண்டையோடுகள் வெளிவருவதால் புனரமைக்கப்பட்ட வீதியின் விபரத்தையும் மன்னார் நீதிபதிகோரியிருப்பதாக தெரியவருகிறது.

திருக்கேதீஸ்வரஆலயம் மாந்தை விதியினூடாக குடிநீர் வழங்குவதற்காக நிலஅடியில் குழாய்கள் பதிக்கும் வேலைகள் கடந்தடிசம்பர் மாதம் 20 ந் திகதி நடைபெற்றப் பொழுது குறித்த பகுதியில் மனித எச்சங்கள் உள்ளமை கண்டுபிடிக்கப் பட்டது.

 திருக்கேதீஸ்வர கிராமபிரிவிலுள்ள மாந்தை பகுதியில் இடம் பெறும் புதைகுழி இன்று சனிக்கிழமை (25) 14 வது தடவையாக அகழ்வுவேளைகள் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட நிதிமன்ற நீதவான் செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இடம்பெறும் இவ் அகழ்வுபணியின்போது இன்று குறித்த மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது.

 இன்று கண்டுபிடிக்கப்பட்ட இவ் மண்டையோடு 2010 ம் ஆண்டுபுனரமைக்கப்பட்ட வீதியின் பகுதிக்குள்ளேயே காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து இதுவரை 44 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று ஏற்கனவே அகழமாக்கப்பட்ட குழிக்குள் இருந்தமண்களை வெளியேற்றியதும் புதைகுழிக்குள் இருந்து அளவீடு செய்யப்பட்ட மனித எலும்புக் கூடுகளை துப்பரவு செய்யப்பட்டு பெட்டிகளுக்குள்;குள் அடைக்கும் பணியும் மனித எச்சங்களை அடையாளப்படுத்தல் பொன்ற வேலைகள் இடம் பெற்றன.
.
அத்துடன் இன்று வரைக்கும் 13 பெட்டிகளில் மனிதஎலும்புக் கூடுகள் பொதிசெய்யப்பட்டுள்ளன. இவைகள் தற்பொழுது புதை குழி பகுதியிலேயேவைக்கப்பட்டுள்ளன.

இவற்றைதற்பொழுது மன்னாரில் பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கைஎடுக்கும்படி கடந்த வெள்ளிக்கிழமை (24) மன்னார் நீதிபதிசெல்விஆனந்திகனகரட்ணம் உத்தரவு இட்டபோதும் தகுந்தபாதுகாப்பான இடம் தெரிவுசெய்யப்படாததினதால் எதிர்வரும் திங்கற்கிழமை இவைகள் மன்னாரில் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   இவ் புதை குழி விடயமாக கண்காணித்து விசாரனைமேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து திருக்கேதீஸ்வரப் பகுதிக்குவந்திருக்கும் குற்றத் தடுப்பு புலனாய்வு குழுவினரும் தங்கள் பணிகளைமேற்கொண்டுவருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை திங்கள் கிழமை மனித எச்சங்ககை தேடும் பணி தொடரவுள்ளது.





இன்றும் திருக்கேதீஸ்வரத்தில் ஒரு மனித மண்டை ஓடு கண்டுபிடிப்பு –படங்கள் Reviewed by Author on January 25, 2014 Rating: 5

1 comment:

vazhikattiguide said...

pazantmiznadu patri www.theguide.jimdo.com conseincecentre@gmail.com aa.mohan

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.