அண்மைய செய்திகள்

recent
-

'தகைமைகளின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை'

தகைமைகளின் அடிப்படையில் கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை என மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரிற்கு பாதிக்கப்பட்டவர்கள் முறையீட்டுள்ளனர்.

இது தொடர்பாக பட்டதாரி ஆசிரியர் நியமன நேர்முக பரீட்சையில் தோற்றிய 27 பேர் கையொப்பமிட்டு நேற்று இந்த கடித்தினை மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரிற்கு அனுப்பியுள்ளர்.

இதன் பிரதிகள் ஜனாதிபதி செயலகம், மாகாண ஆளுநர், முதலமைச்சர், மாகாண பொதுச் சேவைகள் ஆணையாளர் மற்றும் திருகோணமலையிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுலகம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பாக கடந்த 2013.12.11ஆம் திகதி தினகரன் பத்திரிகையின் பிரகாரம் நாங்கள் விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு 2013.12.23ஆம் திகதி தோற்றினோம்.

பின்னர் அதற்கான நியமனம் 2014.01.15ஆம் திகதி நியமனம் வழங்கப்பட்டது. இதன்படி வழங்கப்பட்ட நியமனமானது பத்திரிகையில் கேட்டுக்கொண்ட தகைமைகளின் அடிப்படையில் வழங்கப்படவில்லை.

மாறாக குறைவான மற்றும் எங்களைக் போன்று அதே தகமைகளைக் கொண்ட பட்டதாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கேட்டுக்கொண்ட நான்கு வகையான தகைமைகளின் அடிப்படையில் முதலாம் வகையான தகைமைகளைக் கொண்ட மாணவர்களுக்கும் இந்நியமனம் வழங்கப்படவில்லை. 

இது தொடர்பாக பரிசீலனை செய்து சிறந்த தீர்வினை பெற்றுத் தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.  அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 44 பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத்திற்காக வழங்கப்பட்ட நியமனத்தில் 02 பட்டதாரிகள் மாத்திரமே பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்ட முதலாவது தெரிவு செய்யும் தகமைகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'தகைமைகளின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை' Reviewed by Author on January 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.