அண்மைய செய்திகள்

recent
-

சந்திரிக்கா தலைமையில் சமயங்களுக்கிடையேயான நல்லுறவு கூட்டம்

சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்ற தமது பிரதிநிதிகளை பெயரிடுமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்கர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நேரில் சென்று கேட்டுள்ளார்.

இதேபோல், கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் சமயங்களின் உயர் பீடங்களையும் தமது பிரதிநிதிகளை ஜனவரி 28ஆம் திகதி நடைபெறும் கூட்டத்திற்கு அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

இந்த கூட்டத்தை தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் ஒழுங்கு செய்துள்ளது. இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இந்த கூட்டம் பி.ப 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் இலங்கையில் சமய நல்லுறவை வளர்ப்பதற்கான பரிந்துரைகளின் தொகுதியொன்றை வரைய முக்கியஸ்தர்களின் குழுவொன்றை நியமித்துள்ளது.

இந்த குழுவில் சமய தலைவர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் உள்ளனர். 
சந்திரிக்கா தலைமையில் சமயங்களுக்கிடையேயான நல்லுறவு கூட்டம் Reviewed by Author on January 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.