நான்கு வெவ்வேறு விபத்துக்களில் நால்வர் பலி
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிகம, பலவன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 70 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குருநாகல் – புத்தளம் வீதியில் லொறி ஒன்றில் மோதுண்ட மோட்டார் வண்டியில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இந்நபரது மனைவி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காலி – மாத்தரை பிரதான வீதியில் பொல்ஹென சந்திக்கு அருகில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முயற்சித்த பெண் வேன் மோதி உயிரிழந்துள்ளார்.
மேலும் தொலொஸ்பாகே, கதிரவெளி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அதேபிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பிரோ பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு வெவ்வேறு விபத்துக்களில் நால்வர் பலி
Reviewed by NEWMANNAR
on
February 16, 2014
Rating:

No comments:
Post a Comment