அண்மைய செய்திகள்

recent
-

யாழில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மாவட்ட மக்கள் கலந்து கொள்ளவில்லை - படங்கள்

மீனவர்கள்  எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஆர்ப்பாட்டம் ஒன்றிற்காக யாழ் சென்றுகொண்டிருந்த  மக்களை திசைதிருப்பும் முகமாக பேருந்து சாரதிக்கு விடுக்கப்பட்ட  தொலைபேசி அழைப்பு மிரட்டலையடுத்து குறித்த பயணம் தடைப்பட்டுள்ளது. 

தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவை ஏற்பாடு செய்த மீனவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை வலியுறுத்தி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்காக யாழ்ப்பாணம் நேக்கி சென்று கொண்டிருந்த மன்னார் மாவட்ட மீனவ சமூகங்களை சேர்ந்த மக்கள் இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக தெரியவருவது கடந்த வருடம் சிலாபம் பகுதியில் மீவவர் ஒருவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணம் அடைந்ததை அடுத்து குறித்த மீனவரின் நினைவு தினத்தை ஒட்டி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வட மாகாணத்திலுள்ள ஜந்து மாவட்டங்களும் சேர்ந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்திலும் அதேபோன்று சிலாபத்திலும் இன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளான பேச்சுவார்த்தையின் பின்பும் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் இந்திய இழுவைப்படகுகள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுதல், எரிபொருள் மானியம் நிறுத்தப்பட்டு இன்றுவரை அது வழங்கப்படாமை,தென்பகுதிமீனவர்கள் வடகடல் பரப்பில் வந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது,மீனவ காப்புறுதி மற்றும் பாதுகாப்பு அங்கி ஆகியனவற்றிற்காக பெருந்தொகை பணம் அறவிடுதல் காலநிலை மாற்றம் மற்றும் ஏனைய தொழில் பாதிப்புக்களால் ஏற்பட்ட நஸ்டத்திற்கு இதுவரையில் அரசாங்கம் எந்த ஒரு கொடுப்பனவுகளையும் வழங்காமை, வட பகுதி மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு எந்த ஒரு நல்ல தீர்வையும் அரசு முன்வைக்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது

இந்நிலையில் மன்னார் பள்ளிமுனை மற்றும் முள்ளிக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலுள்ள மீனவ சமூகங்களை சேர்ந்த மக்கள் இரண்டு பேருந்துகளில் யாழ்ப்பாணம் நோக்கி பயனித்த வேளையிலேயே குறித்த  இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து பேருந்தின் சாரதிக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி மிரட்டலில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பயணத்தை உடன் நிறுத்தி மன்னார் திரும்பவேண்டும் அப்படி திரும்பாவிட்டால் பேருந்தை தீயூட்டுவதாகவும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு கொலைமிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்கள் யாழ்பாணம் நோக்கிய பயணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இன்நிலையில் பயண ஒழுங்கு தடைப்பட்டதை அடுத்து குறித்த பயணிகளுக்கும் சாரதி நடத்துனர்களுக்கும் இடையில் ஏற்ப்பட்ட பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை அதனை அடுத்து சம்பவ விடயம் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் அருட்தந்தை நேரு இலுப்பைக்கடவை பொலிசார் ஆகியோர் குறித்த விடயம் தொடர்பாக சாரதி நடத்துனருடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர் எனினும் பேச்சுவார்தையில் எது வித முன்னேற்றமும் காணப்படாத நிலையில் மீண்டும் மன்னார் திரும்பியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
.







யாழில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மாவட்ட மக்கள் கலந்து கொள்ளவில்லை - படங்கள் Reviewed by Author on February 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.