வட மாகாண வைத்தியசாலைகளில் தொடரும் வைத்தியர் பற்றாக்குறை
வடமாகாண வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறை காணப்படுகின்றது ஆகவே இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
வட மாகாணத்தில் 38 வைத்திசாலைகளில் வைத்தியர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தீவகபப்குதிகளில் இந் வைத்தியர் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகின்றது.
ஆகவே வட மாகாணசபையின் சுகாதார அமைச்சினால் ஒப்பந்த அடிப்படையில் வைத்தியர்களை பெற்று தற்போது இவ் வைத்தியசாலைகளை நாம் இயக்கிக் கொண்டிருக்கின்றோம்.
அந்தவகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மத்தியசுகாதார அமைச்சரை சந்தித்து வைத்தியர்களின் தேவை குறித்து நிலைமைகளை விளக்கியதன் அடிப்படையில் 125 உள்ளக பயிற்சி வைத்தியர்களை நிமிப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுமக்களிற்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதன்மூலம் மக்களது அசௌகரியங்களை குறைக்கலாம் என்ற அவசியத்தினை வலியுறுத்தி விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று வட மாகாண சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 2014 பெப்ரவரி 1ஆம் திகதியிலிருந்து 101 நாட்களுக்கு அமுலாக்கும் வகையில் பின்வரும் திட்டங்களை அமுல்படுத்துமாறு சகலபிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்களுக்கும் அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத் திட்டங்களாவன
01. உணவு கையாளும் நிறுவனங்களின் தரத்தினை உறுதிப்படுத்துவதற்காக உணவுகையாளும் நபர்களைக்கான மருத்துவச்சோதனை செய்தல்.
02. புகைப்பிடித்தலைத் தடுப்பதற்காக புகையிலைப் பொருட்களைவிற்பனை செய்யாத உணவகங்களை இனங்கண்டு அவர்களை கௌரவப்படுத்தல்.
03. பாடசாலை மேம்பாட்டுத்திட்டத்தினை திறம்பட செய்வதற்றகா ஒவ்வொரு பாடசாலையிலும் தனியான அறையொன்றை ஒதுக்குதல்.
04. முதியோர்,குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட சேவை வழங்கும் வகையில் மருத்துவ சிகிச்சை நிலையங்களில் தனியான கருமபீடங்களை அமைத்தல்.
05. மருத்தவ சிகிச்சை நிலையங்களில் நோயாளிகளுக்கான நியமன முறையினை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒவ்வொருவருக்கும் தனியான சந்திப்பு நேரங்களை ஒதுக்குவதால் அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்க நடவடிக்கை எடுத்தல்.
06. தொற்றாத நோய்களுக்கான மருத்துவ பரிசோதனையை கிராம மட்டத்தில் மேற்கொள்ளல்.
முன்பள்ளி சிறார்களுக்கான விசேட மருத்தவப் பரிசோதனை மேற்கொள்ளல் என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இத் திட்டஙகள் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
வட மாகாண வைத்தியசாலைகளில் தொடரும் வைத்தியர் பற்றாக்குறை
Reviewed by NEWMANNAR
on
February 03, 2014
Rating:

No comments:
Post a Comment