மன்னார் மாந்தை மேற்குப் பிரதேச மாணவர்களின் கல்விக்கு தனியார் போக்குவரத்தின் இலவச போக்குவரத்து சேவை
மாந்தை மேற்குப் பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்தில் கொண்டு மன்னார் தனியார் போக்குவரத்துச்சங்கம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து சேவையினை மேற்கொண்டு வருகின்றது.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் இடம் பெற்ற போர் நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பின்னர் 2010ஆம் ஆண்டு மீள் குடியேறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த நான்கு வருட காலங்களாக அப்பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெருளாதார நிலையினை கருத்திற்கொண்டு மன்னார் தனியார் போக்குவரத்து துறையினர் கட்டணங்கள் அறவிடாமல் மாணவர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்குகின்றனர்.
சேவா கிராமம், மூன்றாம்பிட்டி, தேவன் பிட்டி இலுப்பைக்கடவை ஆகிய கிராமங்கள் ஒவ்வொன்றும் மன்னார் ஏ32 பிரதான வீதியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கின்றன.
இக்கிராமங்களுக்கு உள்ளக வீதிகளினூடாக பயணிக்கும் மன்னார் தனியார் பேருந்துகள் அங்கிருந்து மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றி இறக்கும் சேவையினை தொடர்ந்தும் இலவசமாக முன்னெடுத்து வருகின்றது.
இது இவ்வாறிருக்க மேற்குறித்த கிராமங்களுக்கான உள்ளக வீதிகள் குண்டும் குழியுமாக இருப்பதனால் பேருந்துகளை செலுத்துவதில் சாரதிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாந்தை மேற்குப் பிரதேச மாணவர்களின் கல்விக்கு தனியார் போக்குவரத்தின் இலவச போக்குவரத்து சேவை
Reviewed by NEWMANNAR
on
February 08, 2014
Rating:

No comments:
Post a Comment