வவுனியாவில் மஞ்சள் செய்கை அறுவடை
வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக முன்னோடித் திட்டமாக 10 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் செய்கைக்கான அறுவடை இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அ.சகிலாபாணு தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் ஆலோசனையுடனான வழிகாட்டலில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஊடு பயிராகவும் தனியாகவும் மஞ்சள் செய்கை பண்ணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கான நிதியை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கிய நிலையில், ஒவ்வொருக்கும் 15,000 ரூபா படி நாட்டுவதற்கான மஞ்சள் கிழங்கும் பசளையும் மொத்தமாக 25 விவசாயிகளுக்கு வழங்கியதாகவும் அவர் கூறினார்.
மஞ்சள் ஏற்றுமதி வாய்ப்பை மையமாகக் கொண்டு இந்தச் செய்கையை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், மஞ்சள் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடமிருந்து மஞ்சளை கொள்வனவு செய்தவற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஒன்பது முதல் 12 மாதச் செய்கையான மஞ்சள் செய்கை குறைவான பராமரிப்புச் செலவுகளுடன் அதிகளவான வருமானம் ஈட்டும் செய்கையெனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
தற்போது இங்கு மஞ்சள் செய்கை பண்ணப்படுவதால் மலிவாக நுகர்வோர்கள் மஞ்சலை பெறும் வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கூறினர்.
மேலும், மஞ்சள் செய்கை அறுவடையின் பின்னர் சந்தைப்படுத்தலில் தாம் பிரச்சினைகளை எதிர்நோக்கலாம். விவசாயத் திணைக்களம் தங்களிடம் மஞ்சளை கொள்வனவு செய்வதற்கு ஆவண செய்ய வேண்டுமெனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
வவுனியாவில் மஞ்சள் செய்கை அறுவடை
Reviewed by NEWMANNAR
on
February 09, 2014
Rating:

No comments:
Post a Comment