மன்னார் வங்காலை கிராம மக்களை சந்தித்தார் - வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர்
மன்னார் வங்காலை கிராமத்திற்கு 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண மீன்பிடிஇ போக்குவரத்துஇ வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்கள் ஞாயிறு திருப்பலியில் கலந்து கொண்டதோடு திருப்பலியின் நிறைவில் வங்காலை புனித ஆனாள் ஆலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கிராம மக்களுடன் விசேட சந்திப்பொன்றை நடாத்தினார் சந்திப்பின்போது வங்காலை பங்குத்தந்தை அருட் பனி ஜெயபாலன் அவர்களும் புனித ஆனாள் மகா வித்தியாலதின் அதிபர் அருட் சகோதரர் சந்தியோகு அவர்களும் கடந்த வட மாகாண தேர்தலில் வேட்பாளர் ஆசிரியர் திரு ஜூட் குரூஸ் அவர்களும் சமூகமளித்திருந்தனர்.
சுமார் 1500 குடும்பங்களைக் கொண்ட வங்காலை கிராமத்து மக்கள் சார்பாக கூடியிருந்த மக்கள் சார்பாக அந்தக் கிராமம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பங்குத்தந்தை தனது கருத்துக்களை தெரிவிக்கையில் உள்ளக வீதிகள் மழை காலங்களில் பாவனைக்கு உதவாதனவாகவே உள்ளது என்றும் கடற்றொழிலை நம்பி வாழும் மக்கள் அனுபவிக்கின்ற வேதனைகள் பிரச்சினைகள் தொடர்பிலும் மக்கள் தங்களது பொது நிகழ்வுகளுக்கு ஒரு பொதுநோக்கு மண்டபம் இல்லாத குறையை அனுபவிக்கின்றனர் என்றும் கடல் அரிப்பு என்னும் பாரிய பிரச்சினையால் சிலவேளைகளில் வங்காலை கிராமமே அழிந்துபோகும் நிலை உள்ளதாகவும் கடல் வளம் இருந்தும் மக்கள் தங்களது ஓய்வு நேரங்களை கழிப்பதற்கு ஒரு பீச் தேவை என்றும் தெரிவித்தார் அதனைத்தொடர்ந்து மீனவர் சங்கத் தலைவர் தனது கருத்தை தெரிவிக்கையில் தங்களது சமூகம் இரண்டு கடல் தொழில் முறைகளை பயன்படுத்துவதாகவும் அவையாவன பாய்ச்சு வலைத்தொலில் மற்றையது கரைவலைத் தொழில் எனவும் இவ்வாறு தாங்கள் பாவிக்கின்ற வலைகள் ஒவ்வொன்றினதும் பெறுமதி சுமார் 200இ000ஃஸ்ரீ ரூபா என்றும் மன்னார் கடல்தொளிலாளர்களால் தங்களது தொழில் மிகவும் பாதிக்கப்படுகின்றது என்றும் எனவே இரண்டு சமூகங்களுடனும் கத்தைது தங்களது தொழிலாளர்களது வாழ்விற்கு உதவி செய்யுமாறும் தெரிவித்தார் அதனைத்தொடர்ந்து கிராம வாசிகள் சார்பாக ஒருவர் பங்குத்தந்தையின் கோரிக்கைகளை விளக்கி கூறினார் அதனைத்தொடர்ந்து பாடசாலையின் அதிபர் அவர்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது அவையாவன பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்கப்பட்ட 6 ஏக்கர் காணியும் தற்பொழுது வங்காலை பறவைகள் சரணாலயத்திற்குள் சென்று விட்டதால் பாடசாலையில் திறமையான மாணவர்கள் இருந்தும் அவர்களது விளையாட்டு திறமைகளை வெளிக்கொணர்வதில் மிகவும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதிகள் இல்லாததால் வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்ற ஆசிரியர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறாக மக்களது கோரிக்கைகளை கேட்டறிந்தபின்னர் கௌரவ அமைச்சர் உரையாற்றுகையில் எமது மாகாணத்தின் நிதி நிலைமைகளை அறிந்திருப்பீர்கள் இருந்தும் எமது மாகாணம் அபிவிருத்தி என்ற வகையில் சுமார் 25 வருடங்கள் பின்னால் நிற்கின்றது எனவே எமக்கு அபிவிருத்தி என்பது மிகவும் முக்கியமானது என்றும் இந்த ஆண்டு சில விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் வருகின்ற ஆண்டுகளில் நிச்சயமாக அபிவிருத்திகள் செயப்படும் என்றும் அபிவிருத்திகளோடு எமது உரிமைகளையும் நாம் வென்றெடுக்கும் வகையில் நகரவேண்டும் எனவும் ஒவ்வொரு கிராமங்களும் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும் அப்போதுதான் என்னால் நிலையான அபிவிருத்திகளை செய்து தரமுடியும் எனவும் மீனவர்களது பிரச்சினைகள் தொடர்பில் மன்னார் பங்குத்தந்தை மற்றும் வங்காலை பன்குத்தந்தையர்களூடாக மக்களை ஒன்று திரட்டி இரு சமூகங்களோடும் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண ஆவன செய்வேன் என்றும் அத்தோடு மத்திய அரசின் கடற்றொழில் அமைச்சருடன் சந்தித்து உரையாடவுள்ளதாகவும் அதனூடாக எனது மாகாணத்திற்கு பெற்றுக்கொள்ளக் கூடிய அபிவிருத்திகளை பெற்றுத்தருவேன் என்றும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
February 10, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment