கிளிநொச்சியிலுள்ள சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிய சிறுவர்கள் பொலிஸ் காவலில்
கிளிநொச்சியிலுள்ள சிறுவர் இல்லமொன்றிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று சிறுவர்களை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் எதிர்வரும் 19ஆம் திகதி வரை சிறுவர் இல்லத்தில் தங்கவைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தப்பியோடிய 3 சிறுவர்களை நேற்று (15) மாலை கண்டுபிடித்த பொலிஸார், அவர்களைஇன்று (16) கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பித்தார்.
மேற்படி சிறுவர் இல்லத்திலிருந்து 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (14) தப்பி ஓடியுள்ளனர். தொடர்ந்து பொலிஸார் நடத்திய தேடுதலின் போது, உருத்திரபுரம் மாணிக்க பிள்ளையார் ஆலய முன்றலில் வைத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
மேற்படி மூன்று சிறுவர்களும் யாழ்ப்பாணம் - உரும்பிராய், கிளிநொச்சி - உருத்திரபுரம் மற்றும் பரந்தன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியிலுள்ள சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிய சிறுவர்கள் பொலிஸ் காவலில்
Reviewed by NEWMANNAR
on
February 16, 2014
Rating:
(13).jpg)
No comments:
Post a Comment