அண்மைய செய்திகள்

recent
-

கனடாவிலிருந்து சொந்த ஊரைப் பார்க்க வந்தவர் மரணம்

கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலைக்கு வருகை தந்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து தனது மனைவியுடன் வருகை தந்த தம்பிராசா செந்தில்குமரன் ( வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 குறித்த நபர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்குப் பலனின்றி நேற்று குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

 இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பெட்டியினுள் வைத்து உறவினர்களிடம் ஒப்படைத்த போது, அதனைத் திறக்க வேண்டாமென வைத்தியசாலையில் கடமை புரிபவர்கள் கூறியதாகவும், இவருடைய மரணத்திற்கான உரிய காரணத்தினைத் தெரிவிக்கவில்லையெனவும் உறவினர்கள் குறிப்பிட்டனர்.
கனடாவிலிருந்து சொந்த ஊரைப் பார்க்க வந்தவர் மரணம் Reviewed by NEWMANNAR on February 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.