பூமி சூரியனைச் சுற்றி வருவதை அறியாத அமெரிக்கர்கள்
அமெரிக்கர்கள் அறிவியலில் ஆர்வம் கொண்டவர்கள். ஆனால் பூமி சூரியனைச் சுற்றி வருவது பற்றி நான்கில் ஒருவருக்கு (26%) தெரியவில்லை என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,200 பேரிடம் இயற்பியல் மற்றும் உயிரியல் தொடர்பான 9 கேள்விகள் கேட்கப்பட்டன.
இதன்படி, ஆய்வில் பங்கேற்றவர்களில் 74 சதவீதம் பேர் மட்டுமே சூரியனை பூமி சுற்றி வருவது தெரியும் என கூறியுள்ளனர்.
இதுபோல, விலங்குகளிலிருந்து பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதன் தோன்றினான் என்பது 48 சதவீத அமெரிக்கர்கர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ளது.
அறிவியல் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒருவர் கூறியுள்ளார். மருத்துவக் கண்டுபிடிப்புகளைத் தெரிந்துகொள்ள விரும்புவதாக 90% பேர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு முடிவுகள், அதிபர் ஒபாமா, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு தேசிய அறிவியல் அமைப்பின் அறிக்கையில் சேர்க்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமி சூரியனைச் சுற்றி வருவதை அறியாத அமெரிக்கர்கள்
Reviewed by NEWMANNAR
on
February 16, 2014
Rating:

No comments:
Post a Comment