புற்று நோய்க்கு 14,000 பேர் பலி
கடந்த வருடத்தில் 14,000 புற்று நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்தில் மாத்திரம் 25842 பேர் புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுமார் ஆறு வகையான புற்று நோய்கள் அதிகமாக ஏற்படுவதாக சுகாதார அமைச்சின் புற்றுறோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் டொக்டர் நீலமணி பரனகம தெரிவித்தார்.
வாய் புற்றுநோய், சுவாச புற்றுநோய் மற்றும் உணவுக் குழாயில் ஏற்படும் புற்றுநோயே அதிகளவில் ஆண்களை பாதிப்பதாக வைத்திய பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இவ்வாறான புற்று நோய் அதிகளவில் புகைபிடித்தல் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படுவதாகவும் டொக்டர் நீலமணி பரனகம சுட்டிக்காட்டியுள்ளார்.
வாய்ப் புற்றுநோயை தடுப்பதற்கு விசேட மருத்துவ வெற்றிலைச் சுருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புற்று நோய்க்கு 14,000 பேர் பலி
Reviewed by NEWMANNAR
on
February 16, 2014
Rating:

No comments:
Post a Comment