அண்மைய செய்திகள்

recent
-

மனித கழிவுகளில் இருந்து பசளை தயாரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு:மன்னார் நகரசபை


மனித கழிவிலிருந்து பசளை உற்பத்திசெய்யும் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்று மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மனித கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திர தொகுதி குறித்த செயற்பாட்டிற்காக பயன்னடுத்தப்படவுள்ளது.

 உலர்வலய நகர நீர் மற்றும் சுகாதார செயற்திட்டத்திற்கு அமைவாக நடைபெற்று வரும் குறித்த வேலைகளுக்கான நிதியினை இலங்கை அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகள் இணைந்து செயற்படுத்திவருகின்றன.
இதற்கென 67 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு அபிவிருத்திபணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

 மனித கழிவு பொருட்களிலிருந்து பசளை தயாரிக்கும் திட்டம் வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே முதல் முதலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் யூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அபிவிருத்தி வேலைகள் எதிர்வரும் யூலை மாதம் வரையிலான ஒருவருடகாலம் நடைபெறவுள்ளது.

மன்னார் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் எடுக்கப்படும் மனித கழிவுகளை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் போடுவதில் சுகாதாரம் உட்பட பல சிக்கல்கள் காணப்பட்டன.
இந்நிலையினை கருத்திற் கொண்டே குறித்த மனித கழிவுகளை வடிகட்டி பதப்படுத்தி பிரயோசனம்மிக்க பசளையாக தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுற்று சூழலுக்கும் சுகாதாரத்திற்கு பாதிப்பில்லாமல் குறித்த மனித கழிவுகளை அகற்றி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பசளையினை மன்னார் மாவட்டம் உட்பட ஏனைய மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்து கிடைக்கப்பெறும் நிதியின் மூலம் மேலும் பல அபிவிருத்தி பணிகளுக்கு செலவிடுவதற்கு மன்னார் நகரசபை திட்டமிட்டுள்ளது.
இதற்கென மன்னார் திருக்கேதீஸ்வரத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஏ32 பிரதான வீதிக்கருகாமையில் அமைந்துள்ள பாப்பாமோட்டை எனும் இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

குறித்த பகுதியில்1.75 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி குறித்த பகுதியில் பசளை தயாரிப்பிற்கென மொத்தமாக 5து விசாலமான தொட்டிகள் அமைக்கப்படுகிறது.
இதன்படி 53 மீற்றர் நீளமும் 38 மீற்றர் அகலமும்கொண்ட தொட்டி ஒன்றும் ,24 மீற்றர் நீளமும் 12 மீற்றர் அகலமும் கொண்ட தொட்டி ஒன்றும் , 18 மீற்றர் நீளமும்  10 மீற்றர் அகலமும் கொண்ட தொட்டி ஒன்றும் அதேபோன்று 8 மீற்றர் நீளமும் 7 மீற்றர் அகலமும் கொண்ட இரண்டு தொட்டிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

குறித்த கட்டுமானபணிகள் முடிவடைந்தபின் பசளை உற்பத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் மூலம் மன்னார் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறித்த வேலைதிட்டத்திளை முதல் இரண்டு வருடங்களுக்கு தேசிய நீர்வடிகாலமைப்பு அதிகார சபை பராமரிப்பதோடு அதன் பின் மன்னார் நகரசபைக்கு வழங்கப்பட்டு பராமரிக்கவுள்ளது










மனித கழிவுகளில் இருந்து பசளை தயாரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு:மன்னார் நகரசபை Reviewed by Author on February 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.