சட்டவிரோதமான முறையில் பீடிகள் விற்பளை செய்த வியாபாரிகளுக்கு தண்டம்
புகைத்தல் உடல் நலத்துக்கு கேடானது என்ற அரச எச்சரிக்கை அற்ற பீடிக்கட்டுக்கள் விற்ற வர்த்தகர்கள் மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகளின் திடீர் பரிசோதனையில் அகப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஐர் செய்யப்பட்டனர்.இச் சம்பவம் மன்னார் நகர் பேசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.இதுபற்றி தெரியவருவதாவது மன்னார் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி தர்மலிங்கம் நந்தகுமார் தலைமையில் சென்ற மதுவரி திணைக்கள உத்தியோகத்தர் கொண்டக் குழு மன்னார் நகர் பேசாலை ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களை திடீர் பரிசோதனை செய்தபோது மூன்று வர்த்தகர்கள் சட்ட விரோத விற்பனையில் அகப்பட்டுக் கொண்டனர்.
இவர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களில் விற்பனைச் செய்த பீடிகளில் அரச எச்சரிக்கையான புகைத்தல் உடல் நலத்துக்கு கேடானது என்ற வாக்கியங்கள் இன்றி விற்பனை செய்த குற்றத்துக்காகவே அகப்பட்ட நிலையில் இவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.
இவ் மூன்று வர்த்தகர்களையும் மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரி மன்னார் நீதிமன்றில் பதில் நீதவான் இம்மனுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஐர் படுத்தியபோது இவர்களுக்கு தலா ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் பீடிகள் விற்பளை செய்த வியாபாரிகளுக்கு தண்டம்
Reviewed by Author
on
February 07, 2014
Rating:
Reviewed by Author
on
February 07, 2014
Rating:

No comments:
Post a Comment