காணாமல் போன மலேஷிய விமானத்தின் சமிக்ஞைகள் கிடைக்கப்பட்டுள்ளது – பிரித்தானிய செய்மதி நிறுவனங்கள்
காணாமல் போனதாகக் கூறப்படும் மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தமது செய்மதி கட்டமைப்புக்களில் பதிவாகியுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செய்மதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
எம் ஏச் 370 என்ற குறித்த விமானம் 239 பேருடன் கடந்த 08 ஆம் திகதி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்தை தேடும் பணிகள் சர்வதேச நாடுகளின் கப்பல்கள் மற்றும் விமானங்களின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே பிரித்தானியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த சமிக்ஞைகள், தேடுதல் நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவக்கூடும் எனவும் பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விமானம் தொடர்பிலான உண்மைத்தகவலை வெளியிடுமாறு சீனா, மலேசியாவைக் கோரியுள்ளது.
அத்துடன், தமது தொழிநுட்ப வல்லுனர்களை மலேசியாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் சீனா அறவித்துள்ளது.
விமானத்தின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போன மலேஷிய விமானத்தின் சமிக்ஞைகள் கிடைக்கப்பட்டுள்ளது – பிரித்தானிய செய்மதி நிறுவனங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 16, 2014
Rating:

No comments:
Post a Comment