மன்னாரில் பொலிஸ் அணிவகுப்பு -படங்கள்
மன்னார் தலைமையக பொலிஸ்சாரின் பொலிஸ் அணிவகுப்பு இன்று சனிக்கிழமை காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த அணிவகுப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகர் சரத் குமார ஜோசப்பின் தலைமையில் நடைபெற்றது.
பொலிசாரின் அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கான மாவட்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜயந்த விக்ரமசிங்க கலந்து கொண்டு பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மன்னார் தலைமையக பொலிஸ்நிலையத்தின் உதவி பொலிஸ் அத்தியகட்சகர் ஜ.ரி.பி.சுகதபால மற்றும் மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துசார தளுவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பொலிசாரின் அணிவகுப்பினை பார்வையிட்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜயந்த விக்ரமசிங்க பொலிசாரின் உடை மற்றும் வாகனங்களை பரிசோதனை செய்தார்.
மன்னாரில் பொலிஸ் அணிவகுப்பு -படங்கள்
Reviewed by Author
on
March 15, 2014
Rating:

No comments:
Post a Comment