அண்மைய செய்திகள்

recent
-

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இன்று ஆரம்பம்.

இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுமார் 7000 அடியார்கள் திருவிழாவில்கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன் பொருட்டு தமிழகத்திலிருந்தும், நெடுந்தீவில் இருந்தும் படகுப் பயண சேவைகள் நேற்று ஆரம்பமானது.

கச்சதீவிற்கான படகுப் சேவை யாழ். குறிக்கட்டுவான் மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் இருந்து நேற்று காலை 6 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவை சிறப்பாக நடத்தும் வகையில் இன்றும், நாளையும் அடியார்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவிக்கின்றார்.

அத்துடன் கச்சதீவில் பக்தர்கள் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக கூடாரங்கள், காலை உணவு, குடிநீர், சுகாதார வசதிகள், மின்சாரம், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான தற்காலிக இறங்குதுறைகள் ஆகிய வசதிகள் செய்துகொடுக்கப்படும் என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து அடியார்கள் கச்சதீவு நோக்கி புறப்பட்டுள்ளதாக தமிழக விசைப்படகு நலன்புரி சங்கம் மற்றும் இந்திய – இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என். தேவதாசன் தெரிவித்தார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இன்று ஆரம்பம். Reviewed by NEWMANNAR on March 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.