சக்கரம் உடைந்ததால் ஓடு பாதையில் மோதுண்ட விமானம் மயிரிழையில் உயிர் பிழைக்கும் பயணிகள்
அமெரிக்க பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து அமெரிக்க எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று புறப்பட தயாரான வேளையில் அதன் சக்கரம் உடைந்து அந்த விமானத்தின் முன்பகுதி ஓடு பாதையில் மோதுண்ட பரபரப்பு சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது அந்த எயார் பஸ் 320 விமானத்தில் 149 பயணிகளும் 5 விமான உத்தியோகத்தர்களும் இருந்துள்ளனர்.
மேற்படி அனர்த்தத்தில் ஒருவருக்கு மட்டும் மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது.
வேறு எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பின்னர் வேறொரு விமானத்தில் போர்ட் லோடர்டேல் நகருக்கு பயணத்தை மேற்கொண்டனர்.
சக்கரம் உடைந்ததால் ஓடு பாதையில் மோதுண்ட விமானம் மயிரிழையில் உயிர் பிழைக்கும் பயணிகள்
Reviewed by NEWMANNAR
on
March 14, 2014
Rating:

No comments:
Post a Comment