அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பில் இருந்து யாழ். சென்ற சொகுசு பஸ் தீயில் எரிந்தது; பயணிகள் உயிர்தப்பினர் -காணொளி இணைப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீப்பற்றியதில் அந்த பஸ் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது.


இந்த சம்பவம் ஏ 9 வீதியின் கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் பஸ்ஸில் திடீரென பற்றிய தீ வேகமாக பரவிய நிலையில் பயணிகள் அதிஸ்டவசமாக எவ்வித பாதிப்புமின்றி பஸ்ஸை விட்டு இறங்கி ஓடியுள்ளனர்.

எனினும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கனகராயன்குளம் பொலிஸார் நீரை கொண்டு தீயை கட்டுப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை இந்த பஸ்ஸில் பயணித்த சுமார் 50 பயணிகளும் வேறோர் பஸ்ஸில் யாழ்ப்பணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காணொளி பார்க்க 
கொழும்பில் இருந்து யாழ். சென்ற சொகுசு பஸ் தீயில் எரிந்தது; பயணிகள் உயிர்தப்பினர் -காணொளி இணைப்பு Reviewed by NEWMANNAR on March 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.