விடத்தல் தீவு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தின் நடுவே மாடு வெட்டும் கொல்களம்-விளையாட்டு வீரர்கள் விசனம்.
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் மாந்தை மேற்கு பிரதேச சபையினால் பல இலட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ள போதும் குறித்த விளையாட்டு மைதானத்தின் நடுவில் மாடு வெட்டும் கொல்களம் காணப்படுவதாகவும் இதனால் விளையாட்டு வீரர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விடத்தல் தீவு கிராம விளையாட்டு வீரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவரின் நேரடி கண்கானிப்பின் கீழ் குறித்த விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு சுற்று வேலியும் அடைக்கப்பட்டுள்ளது.
-எனினும் குறித்த மைதானத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும் பிரதேச சபை தலைவர் அசமந்தப்போக்குடன் செயற்படுவமாக அங்குள்ள விளையாட்டு வீரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-சுமார் 70 இலட்சம் ரூபாய் வரை குறித்த விளையாட்டு மைதானத்திற்கு மாந்தை மேற்கு பிரதேச சபை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அவ்வளவு பணம் செலவிடப்பட்டமைக்காண வேளைத்திட்டங்கள் குறித்த மைதானத்தில் இடம் பெறவில்லை என வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
-மாந்தை மேற்கு பிரதேசச் சபைக்கு சொந்தமான மாடு வெட்டும் கொல்களம் ஒன்று குறித்த விடத்தல் தீவு விளையாட்டு மைதானத்தின் நடுவே காணப்படுகின்றது.இதனால் விளையாட்டு மைதானத்தில் இடம் பெறும் நிகழ்வுகளின் போது குறித்த கொல்களம் பாரிய இடையூரை தோற்றுவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் தனது சுயநலத்துடன் குறித்த விளையாட்டு மைதானத்தை அமைத்துள்ளார்.
குறித்த மைதானம் அமைத்தல்,அவ்விடத்தில் உள்ள மாடு வெட்டும் கொல்களத்தை அப்புறப்படுத்துதல் போன்றவை தொடர்பில் எவ்வித ஆலோசனைகளையும் இக்கிராமத்தில் உள்ள அமைப்புக்கள் எவற்றிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை என அக்கிராம மக்களும்,விளையாட்டு வீரர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
-எனவே குறித்த மைதானம் அமைத்தலில் பாரிய நிதி மோசடி இடம் பெற்றுள்ளதோடு மைதானத்திற்கு கொட்டுவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பல டிப்பர் மண்களும் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-எனவே இனி வரும் காலங்களில் மாந்தை மேற்கு பிரதேச சபையினால் விடத்தல் தீவு கிராமத்தில் முன்னெடுக்கும் எந்த வித வேளைத்திட்டங்களாக இருந்தாலும் பிரதேச சபை தலைவரின் சுயநலத்துக்காக மேற்கொள்ளாது விடத்தல் தீவு கிராம மக்களின் ஆலோசனைகளை பெற்று வேளைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு குறித்த கிராம மக்களும்,இளைஞர் கழக வீரர்களும் வேண்டு கோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடத்தல் தீவு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தின் நடுவே மாடு வெட்டும் கொல்களம்-விளையாட்டு வீரர்கள் விசனம்.
Reviewed by NEWMANNAR
on
June 27, 2014
Rating:
No comments:
Post a Comment