அண்மைய செய்திகள்

recent
-

புலமைப்பித்தனின் பேரன் நடிக்கும் எவன்

சன் லைட் சினிமாஸ் தயாரித்துள்ள படம், எவன். திலீபன் புகழேந்தி ஹீரோவாக நடிக்கிறார். இவர் புலவர் புலமைப்பித்தனின் பேரன். தீப்தி ஹீரோயின். மற்றும் உஜ்ஜைனி ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். கே.எம்.துரைமுருகன் இயக்குகிறார். 

படம் பற்றி துரைமுருகன் கூறியதாவது: 

அம்மா- மகனை சேர்ப்பதற்கு ஹீரோயின் படும்பாடுதான் படம். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது. காட்டுக்குள் போவதற்கு முன், சிகரெட் புகைக்ககூடாது, பூ வைத்துக்கொண்டு போகக்கூடாது என்பது உட்பட பல விஷயங்களைச் சொல்லியிருந்தார்கள். மீறினால் தேனீக்கள் கொட்டும் என்றார்கள். 

தண்ணீருக்குள் முங்கினாலும் வெளியே வரும் வரை காத்திருந்து கொட்டுமாம் தேனீக்கள். ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது செட் அசிஸ்டென்ட் ஒருவர் புகைப்பிடித்திருக்கிறார். தேனீக்கள் கலைந்து படக்குழுவை விரட்டியது. இதில் நான்கு பேர் தேனீக்கள் கொட்டி கடுமையாகப் பாதிப்படைந்தனர். திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம் என்றார்.
புலமைப்பித்தனின் பேரன் நடிக்கும் எவன் Reviewed by NEWMANNAR on July 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.