ஆப்கானில் தற்கொலைக்குண்டுதாரி தாக்குதல்: ஜனாதிபதியின் மைத்துனர் பலி
ஆப்கானிஸ்தானில் கந்தஹார் நகரில் தற்கொலைக் குண்டுதாரியொருவர் நடத்திய தாக்குதலில் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயியின் மைத்துனர் கொல்லப்பட்டுள்ளார்.
ஹமீட் கர்ஸாயியின் மைத்துனரான ஹஷ்மத் கர்ஸாயி ரமழான் பண்டிகையையொட்டி தனது வீட்டிற்கு விஜயம் செய்த விருந்தினர் ஒருவரை வரவேற்றுக் கொண்டிருந்த போது அவர்கள் மத்தியிலிருந்த தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய இருவரில் ஒருவரான அஷ்ரப் கானியின் பிரசார முகாமையாளராக ஹஷ்மத் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை.
எனினும் ஆப்கானிஸ்தான் தேர்தலை குழப்பப் போவதாக சூளுரைத்திருந்த தலிபான் போராளிகளே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என நம்பப்படுகிறது.
ஆப்கானில் தற்கொலைக்குண்டுதாரி தாக்குதல்: ஜனாதிபதியின் மைத்துனர் பலி
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:


No comments:
Post a Comment