இஸ்ரேலைக் கண்டித்து இலங்கையின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனிய மக்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதலைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாட்டின் சில பகுதிகளில்நேற்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நோன்புப் பெருநாள் தொழுகையின் பின்னர் இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னப்பாலமுனை பிரதேசத்திலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் பங்குபற்றியிருந்தனர்.
பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலைக் கண்டித்தும் எழுதப்பட்டிருந்த சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் பெண்களும் பங்கேற்றிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அம்பாறை மாவட்ட பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நோன்புப் பெருநாள் தொழுகையினைத் தொடர்ந்து இடம்பெற்ற பிரசங்கங்களில் பாலஸ்தீனிய மக்கள் நினைவு கூரப்பட்டதோடு அவர்களுக்காக பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதேவேளை, மட்டக்களப்பு பகுதியிலும் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலைக் கண்டித்து இலங்கையின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 30, 2014
Rating:


No comments:
Post a Comment